சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்
ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழக சட்டமன்றத்தில் 2ஆவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதா உள்பட, பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரை மு.க. ஸ்டாலின் வலியுறுத்தத்தியதாகவும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநர் உறுதியளித்ததாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
'The Dravidian Model' நூலை அன்போடு வழங்கி மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்தேன்.#NEET விலக்கு சட்டமுன்வடிவு & நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரினேன்.#NEET விலக்குச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார். pic.twitter.com/Sktx67M3ZD
— M.K.Stalin (@mkstalin) March 15, 2022