Site icon ழகரம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் நடைபெறும் 44-வது ஃபைடே #செஸ்ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் அனைத்து சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வசுதைவகுடும்பம் (உலகம் ஒரு பெரிய குடும்பம்) என்ற உண்மையான உணர்வோடு நாம் போட்டியில் பங்கேற்று வென்று புதிய வரையறைகளை வகுப்போம். நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்தினார்” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version