Site icon ழகரம்

கோகுல்ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு ; ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளியாக அமையவேண்டும் : மநீம

’’கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை, ஆணவப் படுகொலை எனும் காட்டு மிராண்டித்தனத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைய வேண்டும்” என மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “தற்கொலை என மூடிமறைக்க முயற்சித்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேரை குற்றவாளிகள் என மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை ஆணவப் படுகொலை எனும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையவேண்டும். தமிழகத்தைப் பீடித்துள்ள சாதி வெறி ஒழியட்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.

Exit mobile version