Site icon ழகரம்

8 நாட்களில் 7-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: டெல்லியில் லிட்டர் ரூ.100-ஐ கடந்தது

பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களில் 7வது முறையாக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ கடந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96க்கும் விற்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, 137 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதிலிருந்து 8 நாட்களில் 7வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. எரிபொருள் தேவையில் 85% இறக்குமதியையே நம்பியிருக்கும் நமது தேசத்தில், இந்த விலையுயர்வின் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து மலிவு விலை கச்சா எண்ணெய்யை மத்திய அரசு இறக்குமதி செய்து வருகிறது. இருப்பினும் இன்னொரு புறம் விலையேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

Exit mobile version