Site icon ழகரம்

தூத்துக்குடி பட்டாசு ஆலை தீ விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு….!

கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் பட்டாசு ஆலையில் 45 கட்டிடங்கள் உள்ளன. இதில் இன்று ஒரு கட்டிடத்தில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் ஆகிய 3 ரசாயனங்களைக் கொண்டு, ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்காக குழாயில் மருந்து செலுத்தும் பணி நடந்தது. அப்போது திடீரென அங்கு வெடி விபத்து ஏற்பட்டது.

இதில், அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இதில் சிக்கிய ஈராச்சியைச் சேர்ந்த ராமர், தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (47), குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் (43), நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

 

Exit mobile version