Site icon ழகரம்

இதுதான் திமுகவின் சமூகநீதியா? – பெரியார் பல்கலை., கேள்வித்தாள் விவரகாரத்தில் இபிஎஸ் கேள்வி

சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித்தாளில் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கும் கேள்விகள் கேட்டிருப்பதுதான் திமுகவின் சமூக நீதியா என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்று பெரியார் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில் இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களே பாரீர், ‘பெரியாரின்’ பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில், பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் விடியா அரசின் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா?” இவ்வாறு அந்த பதிவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version