தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று மாலை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்த, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி, அதிமுக தலைமை சரியில்லை என்றும் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செம்மலை, மாநில கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.