தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயசரிதையான ‘உங்களின் ஒருவன்’ (பாகம்-1) புத்தக வெளியிட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.
விழாவில் பங்கேற்க அகில இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமான மூலம் சற்று முன் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, ஈவி.கேஸ் இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர்கள் சென்னை வந்தடைந்த ராகுல் காந்தி அவர்களுக்கு பூங்கெத்து குடுத்து வரவேற்றனர்.
காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பழைய விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வரை சாலையோரம் கைகளில் ‘பிலவ்டு லீடர்’ என்கிற வாசங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு மேள தாளம் முழங்க மயிலாட்டதுடன், கரக்காட்டம், ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன் ராகுல் காந்தியை வரவேற்றனர்.