Site icon ழகரம்

பொறியியல் கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது – உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உறுதி

தமிழகத்தில் பொறியியல் படிப்புக் கான கல்விக் கட்டணம் உயர்த்தப்படாது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 இணைப்புக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் பட்டயப் படிப்புகளுக்கு (டிப்ளமோ) 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. நடப்பாண்டு பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணையை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் 2022-23 கல்வியாண்டு பாலிடெக்னிக் படிப்பில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். ஜூலை 22-ம் தேதி கலந்தாய்வு தொடங்கும். நேரடி 2-ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 23 முதல் ஜூலை 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விரிவான கலந்தாய்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Exit mobile version