Site icon ழகரம்

நாளை முதல் 100% மின்சார ரயில்கள் இயங்கும்…..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் கணிசமாக குறைந்து வரும் நிலையில், நாளை முதல் சென்னையில் 100 சதவீதம் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

வார நாட்களில் 658 ரயில்கள் தினந்தோறும் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொற்று குறைந்ததையடுத்து சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. நாளடைவில் சிறப்பு ரயில்களோடு மெட்ரோ ரயில்களும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் மின்சார ரயில்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இயக்கப்பட்டு வந்தது.

 

Exit mobile version