Site icon ழகரம்

யாசின் மாலிக் வழக்கு: இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம்

தீவிரவாதத்தை நியாயப்படுத்த வேண்டாம் என யாசின் மாலிக் வழக்கில் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஓஐசி எனப்படும் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை வழங்கியதை விமர்சித்திருந்தது.

இது குறித்து வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் அந்தக் கூட்டமைப்பு தீவிரவாத நிதியை ஆதரிப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. தீவிரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையையே இந்த உலகம் விரும்புகிறது. அதனால் தீவிரவாதத்தை ஓஐசி நியாயப்படுத்த வேண்டாம்” என்று கூறினார்.

முன்னதாக தீவிரவாத வழக்குகளில் சிக்கிய காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 10 குற்றங்களில் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. என்ஐஏ தரப்பில் யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Exit mobile version