நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், கட்சி அடிப்படையில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி வரை பல்வேறு காரணங்களுக்காக காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 20 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் 498 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இதைத் தவிர்த்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர், 2 நகராட்சி வார்டு உறுப்பினர், 8 பேரூராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று 12-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதன்படி, கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற்ற பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
2 மாநகராட்சி வார்டு உறுப்பினர், ஒரு நகராட்சி வார்டு உறுப்பினர், 6 பேரூராட்சி வார்டு உறுப்பினர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 14 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.