திமுக சார்பில் நகர்ப்புற வார்டு கிளை அளவிலான உட்கட்சி தேர்தல் வரும் 22-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் கடந்த 2020 பிப்ரவரியில் தொடங்கி, முதல்கட்டமாக கிராமப்புற கிளை தேர்தல் நடத்திமுடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற வார்டுகள் அளவிலான கிளை தேர்தலைகட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் 15-வது பொதுத் தேர்தலில் பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகள் அளவிலான உட்கட்சி தேர்தல் வரும்22-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை நடத்தப்பட உள்ளது.
வார்டு அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள் (ஒரு ஆண், ஒரு பெண்), பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதி ஆகியபதவிகளுக்கு வேட்புமனு தாக்கல்செய்ய ரூ.100, செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.20 கட்டணம்.
சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் உள்ள வார்டு கிளை தேர்தல் ஏப்.29, 30, மே 1-ம் தேதிகளில் நடக்க உள்ளது.
வட்டக் கிளையில் அவைத் தலைவர், துணைச் செயலாளர், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதி ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், 14-வது பொதுத்தேர்தலின்போது உறுப்பினராக பதிவு செய்திருத்தல் வேண்டும். அவர்கள் இப்போது உறுப்பினராக இருக்க வேண்டும். செயற்குழு உறுப்பினருக்கு ரூ.100, இதர பொறுப்புகளுக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.