”இன்பநிதி” முதலமைச்சராக வேண்டும்! இன்பநிதி வாழ்க! என்று சொல்வோம்! திமுகவின் அமைச்சர் கே.என் நேரு, வி.பி ராஜன் கேலிக்கூத்தான பேச்சு.
Editor Zhagaram
”இன்பநிதி” முதலமைச்சராக வேண்டும்! இன்பநிதி வாழ்க! என்று சொல்வோம்! திமுகவின் அமைச்சர் கே.என் நேரு, வி.பி ராஜன் கேலிக்கூத்தான பேச்சு.
சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது, வாரிசு அரசியல் அல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும் திமுகவை கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுவோம். அவர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் வேறு யாருக்கு விசுவாசமாக இருப்போம். உதயநிதி ஸ்டாலின் இல்லை அவர் மகன் வந்தாலும் நாங்கள் வாழ்க என்று தான் சொல்வோம் என்றார்.
விருதுநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சிகள் உதயநிதி ஸ்டாலினை பார்த்து அஞ்சுவதால்தான், போகும் இடங்களில் எல்லாம் அவரை பற்றியே பேசுவதாக விமர்சித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சரவையில் பங்கேற்க, உதயநிதி ஸ்டாலினுக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக தெரிவித்தார்.
கடலூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ வி.பி ராஜன் திமுக வாரிசு அரசியல் தான் நடத்துகிறது என்றும் இன்ப நிதியும் நான் இருக்கும் போதே முதலமைச்சராக வரவேண்டும் என்றும் கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
சுயமரியாதை,சமூகநீதி என்று பேசிய கட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை பரம்பரை பரம்பரையாக முதலமைச்சராகத் துடிக்கும் இவர்களின் பேச்சும்! செயலும் கேலிக்கூத்தாகி சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.