Site icon ழகரம்

சென்னையில் திமுக பிரமுகர் கொலை ; 4 பேர் அதிரடி கைது…!

சென்னை காந்தி நகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

தேர்தலில் தீவிரமாக பணியாற்றி அவர், படுகொலை செய்யப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.

இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை செய்து உறுதி செய்துள்ளனர்.

திமுக பிரமுகர் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது தாயுடன் மதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இது தொடர்பாக இருவரையும் பலமுறை கண்டித்தும் தொடர்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில், தனது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, வினோத், கணபதி, நரேன், உசேன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Exit mobile version