தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள்தாழியில் இருந்து அதிகளவில்நெல் உமிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மத்திய தொல்லியல் துறை சார்பில், ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணி கடந்த அக்டோபரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 இடங்களில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 62-க்கும் மேற்பட்டமுதுமக்கள் தாழிகள் எடுக்கப்பட்டுள்ளன. குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அகழாய்வு பணியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 2 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அகழாய்வு நடைபெறும் 3பகுதிகளில் ஒரு இடம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. கடந்த 1902-ம்ஆண்டு அலெக்சாண்டர் ரியா என்ற ஆங்கிலேயர் அகழாய்வு செய்த இடத்தின் அருகே, இந்தஅகழாய்வுப் பணி நடந்து வருகிறது. இந்த இடத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பெரிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாழியில் இருந்து, நெல்உமிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. தாழியைச் சுற்றி 100-க்கும்மேற்பட்ட மண் கலயங்கள், சிறுபானைகள், இரும்பு வாள் ஆகியவை கிடைத்தன எனவே,பழங்காலத்தில் வாழ்ந்த தலைவன்அல்லது போர் வீரனின் தாழியாக இது இருக்கலாம் என்றுநம்பப்படுகிறது. இப்பணி விரைவில் நிறைவுற்று, அருங்காட்சியகம்அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.