இயக்குநர் பாலா தனது மனைவியைப் பிரிந்தார். இருவருக்கும் மார்ச் 5ல் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாலா தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமலரை கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 5ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குப் பிரார்த்தனா என்ற மகள் உள்ளார்.
17 ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இணைந்திருந்த இத்தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இருவருமே விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மார்ச் 5ஆம் தேதியன்று இருவருக்கும் சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.