செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.
வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரித்து வரும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார்.
இதில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓம்பிரகாஷ் ஓளிப்பதிவு செய்ய புவனா சுந்தர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.