இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் புகாரை அளித்துள்ளது.
அனைத்துலக சட்ட வரம்புக்கு உட்பட்டு கோத்தபாய மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கமும்கூட தனது நாட்டுச் சட்டங்களின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் கோத்தபய ராஜபக்ஷ, அப்போது இலங்கை ராணும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதாக அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பலியானதாக் கூறப்பட்ட நிலையில், அவர் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், போர் குற்றங்கள் உட்பட கோத்தபயவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்கள் குறித்து சிங்கப்பூரிலேயே அவர் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்கிறது அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு. அதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது.
இலங்கையில் நிகழ்ந்த இறுதிகட்ட போரின்போது கோத்தபய பல்வேறு போர்க்குற்றங்களைப் புரிந்ததாக அந்த அமைப்பு சாடியுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு தகவல்களைத் திரட்டி இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பின் வழக்கறிஞர் அலெக்சாண்டிரா லில்லி கேதர்.