ராஜஸ்தானில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 115 கி.மீ தூரத்தில் உள்ள சிகார் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற கட்டு ஷ்யாமிஜி கோயில். இந்தக் கோயிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் பங்கேற்க இன்று ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 3 மூன்று உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில், பருவமழை காலத்தில் இந்தக் கோயிலில் பல்வேறு திருவிழாக்களும் நடைபெறுவது வழக்கம். கொரோனாவுக்குப் பின்னர் நடைபெறும் திருவிழா என்பதால் இந்த ஆண்டு இத்திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதனால் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனாலேயே இந்த விபத்து நடந்துள்ளது. இப்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. கட்டு ஷியாம்ஜி கோயில் சிக்கார் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான புனிதத்தலம். இடர் நீங்க இக்கோயிலில் பிரார்த்தனை செய்தால் தீர்வு கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.