கோவாக்சின், கோவிஷீல்டு இணைந்து போட்டு கொள்வது பாதுகாப்பானதா ?
ஒரு டோஸ் கோவாக்ஸின் மற்றும் மற்றொரு டோஸ் கோவிஷீல்டு போட்டு கொண்டால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கண்டுபிடித்துள்ளது.

ஒரு டோஸ் கோவாக்ஸின் மற்றும் மற்றொரு டோஸ் கோவிஷீல்டு போட்டு கொண்டால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவின் மருந்து ஒழுங்குபடுத்தும் நிபுணர் குழுவான டிசிஜிஐ குழுவானது, இந்த இரண்டு தடுப்பூசிகள் போட்டு கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமா என்ற ஆய்வை சென்ற மாதம் தொடங்கியது. இவர்களது ஆய்வில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் இணைந்து பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது எனவும், மேலும் , கொரோனா வைரஸ்க்கு எதிரான நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அதிக நோயெதிர்ப்பாற்றலை தருகிறது என கண்டறிந்து உள்ளனர்.
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) இந்த ஆய்வு மேற்கொள்ளபரிந்துரை செய்தது.அதனடிப்படையில், இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் 300 தன்னார்வலர்களை கொண்டு நான்காம் கட்ட ஆய்வு தொடங்க இருக்கிறது.
கொரோனா மூன்றாம் அலை வந்து கொண்டு இருக்கும் இந்த சூழலில், அதிகமாக தடுப்பூசி செலுத்தி கொள்வது, தொற்றில் இருந்து பாதுகாக்கும். மேலும் தனி மனித இடை வெளி, முகவசம் பயன்படுத்துதல், மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை தொடர்ந்து செய்வது, கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பளிக்கும்