Site icon ழகரம்

அதிமுக உட்கட்சி தேர்தல் : உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு….!

கடந்த டிசம்பர் 6ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி பழனிசாமி தொடர்ந்த வழக்கு மற்றும் தேர்தலை எதிர்த்து கே.சி பழனிசாமி தொடர்ந்த வழக்கை நிராகிரிக்கக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரபட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

 

Exit mobile version