தமிழகத்தில் ஜனவரி 22-ம் தேதி அன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், நேற்று பொங்கல் விடுமுறை என்பதால் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. 19-வது தடுப்பூசி முகாம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.