14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று (ஜூலை 6) முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது. இதனால் இன்று முதல் சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.1068.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படும்.
புதிய விலைப் பட்டியல்:
டெல்லி: ரூ.1052.50
சென்னை: ரூ.1068.50
மும்பை: ரூ.1,002.50.
கொல்கத்தா: ரூ.1079
4 மாதங்களில் ரூ.103 உயர்வு: கடைசியாக கடந்த மே 19 ஆம் தேதி சிலிண்டர் விலை ரூ.3 உயர்த்தப்பட்டது, மே 7ல் ரூ.50 உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை ரூ.1018.50 காசுகளுக்கு விற்பனை ஆன சிலிண்டர் இனி ரூ.1068.50க்கு விற்பனை செய்யப்படும்.
5 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் ரூ.18 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.956.50 என்றளவிலேயே இருந்தது. ஆனால் கடந்த 4 மாதங்களில் பல கட்டங்களில் விலை உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை 103 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
புதிய விலையேற்ற ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.