தமிழ்நாடு அரசின் கட்டாய தடுப்பூசி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வெள்ளிகிழமை) சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை அறிவித்துள்ளனர்.பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
குழந்தைகளிடத்தில் கட்டாய கொரோனா தடுப்பூசித் திணிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கெதிரான எங்கள் கருத்தைத் தெரிவிக்க – எங்கள் கூட்டமைப்பின் சார்பில், நாளை 25.03.2022 வெள்ளி அன்று காலை 11 மணிக்கு சேப்பாகத்திலுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறோம்.
இதில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், மருத்துவர் பி. ஹரிசங்கர் M.B.B.S., (மக்கள் அறிவியல் இயக்கம்), அக்குஹீலர் S.A. வசீர் சுல்தான் DASC., D.Ed (Accu)., (அக்குபங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பு – இந்தியா), மருத்துவர் முகமது யூசுப் (அனைத்து தமிழ்நாடு அக்குபஞ்சர் மற்றும் மாற்றுமுறை மருத்துவ சங்கம் – ATAMA) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மருத்துவர்களும், பொறுப்பாளர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்வுக்கு, தங்கள் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை அனுப்பி செய்தி சேகரித்து வெளியிடுமாறு தங்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம். என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது