
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமா மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட இருக்கிறது.
இந்நிலையில் கோவையில் லங்கா கார்னர் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஸ்டாலினின் சாதனைகள், போராட்டங்கள், குடும்ப நிகழ்வுகள் என பல பரிமாணங்கள் கொண்ட 70 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் நெருப்புடா… தமிழகத்தை நெருங்குடா பார்க்கலாம் என்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
திமுக கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மசூது என்பவர் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு பகுதியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றது. கோவை இனி தங்கள் கோட்டை என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர். இதனை தெரிவிக்கும் விதமாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.