பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Editor Zhagaram
காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற வந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.
காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற தமிழகம் வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்று பொன்னியின் செல்வன் நாவலை பரிசாக அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அத்துடன் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழாவும் நடைபெறுகிறது. இந்த இருவிழாக்களிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இந்த விழாவில் 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் பிரதமர் மோடி வழங்கினார்.