Site icon ழகரம்

சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…..!

காதல் தோல்வியால் சென்னை விமான நிலைய கழிவறையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் நாக்கூர் மாவட்டம் சத்துலவாஸ் கிராமத்தை சேர்ந்த பல்தேவ் ராம் என்பவரது மகன் யஸ்பால்(வயது 26). இவா் 2017ம் ஆண்டில் மத்திய தொழிற்படை போலீஸ் பணியில் சோ்ந்தார். இதையடுத்து சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டார்.

இன்று காலை விமான பகுதியான நுழைவு 19 அருகே உள்ள விமான நிலைய கழிப்பறையில் யாஸ்பால் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே வலது பக்க நெற்றியில் சுட்டுகொண்டு ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் அர்னல்டு ஈஸ்டர், இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினா். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Exit mobile version