சீனாவில் 133 பயணிகளை ஏற்றிச் சென்ற சீன விமானம் ஒன்று மலை பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது.
சீனாவின் குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்கு 133 பயணிகளுடன் சென்ற சீன ஈஸ்டர்ன் பெசன்ஞர் ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் குவாங்சி என்ற மலை பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவுக்குச் சொந்தமான சிசிடிவி செய்தி நிறுவனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. அதேநேரம் இந்த விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
குவாங்சி பகுதியில் போயிங் 737 விமானம் மோதியதால் அங்குள்ள மலைப் பகுதியில் பெரியளவில் தீ ஏற்பட்டுள்ளது.