Site icon ழகரம்

பள்ளிக் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதுதான் திமுகவின் திராவிட மாடலா? – தினகரன்

பள்ளிக்கூடக் கழிவறையை குழந்தைகள் சுத்தம் செய்யும் காணொளி மனம் பதைக்கச் செய்கிறது என்று அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினகரன் தனது ட்விட்டர் அடுத்தடுத்த பதிவில், ”ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் பால் மணம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்கூடக் கழிவறையை சுத்தம் செய்வதாக வெளியாகியிருக்கும் காணொளி மனம் பதைக்கச் செய்கிறது.

புத்தங்களை ஏந்த வேண்டிய கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது நியாயமா? இதுதான் தி.மு.க.வின் திராவிட மாடலா? இனி, இப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்திடக்கூடாது. மாணவர்கள் மகிழ்ச்சியோடு வந்து படிக்கும் இடமாக அரசு பள்ளிக்கூடங்கள் மாற்றப்பட வேண்டும்.

இது போலத்தான் நிறைய பள்ளிகளில் நடக்கிறது படிப்பதற்குதான் மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் குப்பை பொறுக்கவும், கழிவறை சுத்தம் செய்யவும் வரவில்லை இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க ஒரு சட்டம் போட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version