பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசின் 84 வது பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், ” பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! சமூகநீதிக் களத்தில் மேலும் பல்லாண்டுகள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற விழைகிறேன்” இவ்வாறு அந்த பதவில் கூறியுள்ளார்.