சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்துவந்த சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்தது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கு ஒப்புதல் அளித்ததால், மூன்று மாதத்திற்கு முன்பு பிரிவு உபச்சார விழாவில் கூட கலந்துகொள்ளாமல் சஞ்ஜிப் பானர்ஜி சென்னையிலிருந்து விடைபெற்றார்.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நவம்பர் 22ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கடந்த 10ம் தேதி அவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி முன்னிலையில் அவர் பதவிகேற்க உள்ளார்.