செங்கல்பட்டு அருகே குளிர்சாதனப்பெட்டி வெடித்து விபத்து – 3 பேர் பலி
Editor Zhagaram
ஊரப்பாக்கத்தில் குளிர்சாதனப்பெட்டி(Fridge) வெடித்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கோதண்டராமன் நகரில் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி(Fridge) வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கிரிஜா (63), ராதா (55), ராஜ்குமார் (47) ஆகியோர் உயிரிழந்தனர்.
காயமடைந்த குழந்தை உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர். பலத்த தீக்காயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திதி கொடுக்க துபாயிலிருந்து வந்த உறவினர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.