செய்திகள்
செங்கல்பட்டு அருகே குளிர்சாதனப்பெட்டி வெடித்து விபத்து – 3 பேர் பலி
குழந்தை உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர்....
- ஊரப்பாக்கத்தில் குளிர்சாதனப்பெட்டி(Fridge) வெடித்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே கோதண்டராமன் நகரில் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி(Fridge) வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கிரிஜா (63), ராதா (55), ராஜ்குமார் (47) ஆகியோர் உயிரிழந்தனர்.
- காயமடைந்த குழந்தை உள்பட 2 பேர் மீட்கப்பட்டனர். பலத்த தீக்காயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திதி கொடுக்க துபாயிலிருந்து வந்த உறவினர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு கூடுவாஞ்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.