Site icon ழகரம்

ஏர் இந்தியாவின் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த சந்திரசேகரன் நியமனம்….!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது.

இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்படுவதாக டாடா அறிவித்தது.

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி. இதனால் அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளப்பின.

இந்தநிலையில் ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரன் இருப்பார் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை டாடா குழுமம் இன்று வழங்கியுள்ளது.

 

Exit mobile version