நகர்புற உள்ளாட்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஒருவர் பிரச்சாரத்தை நிறுத்தும்படி சொல்லியதால் அவரை ஒருமையில் பேசியதுடன் காவல்துறை தற்போது ஏவல்துறையாக உள்ளது என்றுள்ளார். மேலும் போலீசார் குறித்து அவதூறாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி பொது இடத்தில் காவல் துறையினரை அவதூறாகவும், ஆபாசமாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பொது இடத்தில் காவல் துறையினரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தல் , ஆபாசமாக பேசுதல என 294b, 504 என இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.