Site icon ழகரம்

குருமூர்த்திக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு மீதான நடவடிக்கையை தொடர வேண்டாம்….!

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ’உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள், யார் மூலமாவது யார் காலையாவது பிடித்து தான் நீதிபதிகளாக வந்துள்ளனர்’ என்று பேசினார்.இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .

தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை திரும்பப் பெற்றதை எதிர்த்து குருமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து குருமூர்த்தி மனுவுக்கு பதிலளிக்கும்படி, வழக்கறிஞர் எஸ். துரைசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். அதுவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் மனு மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

Exit mobile version