அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியின் போது உலோக வளையல் கண்டுபிடிக்கப்பட்டது.
சோழமாமன்னர் ராஜேந்திரசோழன் தெற்காசிய நாடுகளை வென்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தை தனது தலைவராக கொண்டு ஆட்சிசெய்தார். மாளிகைமேடு என்ற இடத்தில் சோழமன்னர்களின் அரண்மனை கட்டப்பட்டு 250 ஆண்டுகள் சோழராஜ்யம் நடைபெற்றது.
இதன்அடிப்படையில் கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேடு தொல்லியல் தளத்தில் முதல்கட்டஅகழ்வாராய்ச்சி நடைபெற்றது. தற்போது கங்கைகொண்டசோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு, தமிழ்நாடு தொல்லியல்துறை இரண்டாம்கட்ட அகழ்வாராய்ச்சியை தொடங்கியுள்ளது.
அகழ்வாராய்ச்சிக்கு தோண்டப்பட்ட குழியில் நாற்புறத்தில் 170 செ.மீ ஆழத்தில் 7.920 கிராம் எடையுள்ள இந்த வளையல் கண்டெடுக்கப்பட்டது. 4.9 செ.மீ நீளம் மற்றும் 4 மி.மீ தடிமன் கொண்ட இந்த வளையல் உடைந்த நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.