Site icon ழகரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்….!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version