பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில், அடுத்த மாதம் 3-வது வாரம் நடைபெற உள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் 3 நாட்கள் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என 300-லிருந்து 500 பேர் வரை செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கினறன.
இந்த செயற்குழு கூட்டம் ஹைதராபாத் எச்ஐசிசி நோவாட்டல் அல்லது தாஜ் கிருஷ்ணா நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் என கூறப்படுகிறது.