செய்திகள்தமிழ்நாடு

தமிழகத்தில் ‘பைக் டாக்ஸி ’ க்கு அனுமதி இல்லை: தகவல் உரிமை சட்டத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் மோட்டார் சைக்கிள்களை வணிகரீதியாக பயன்படுத்த அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை என தகவல் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் தனியார் நிறுவனங்கள் பைக் டாக்ஸி போக்குவரத்து சேவையை நடத்தி வருகின்றன. கால் டாக்ஸியை விட கட்டணம் குறைவாக இருப்பதால் பைக் டாக்ஸி சேவைக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்த பைக்டாக்ஸி சேவை அரசின் அனுமதிஇல்லாமல் நடைபெற்று வருவது தற்போது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்கள் வணிகரீதியாக பயன்படுத்தப்படுவது குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறையிடம் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. அதில், தமிழகத்தில் இருசக்கர வாகனத்தை வணிகரீதியாக பயன்படுத்த அனுமதி உள்ளதா? எத்தனை வாகனங்களுக்கு வணிகரீதியான பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? பைக் டாக்ஸி சேவையை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்விகள் இருந்தன.

இதற்கு போக்குவரத்து மற்றும்சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் உதவிச் செயலாளர் பதில் அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் பைக் டாக்ஸி போக்குவரத்து சேவைக்கு இதுவரை தமிழக அரசு எந்த அனுமதியும் அளிக்கவில்லை.

இவ்வகையான பயன்பாட்டுக்கு இதுவரை லைெசன்ஸ் எதுவும் வழங்கப்படவில்லை. இருசக்கர வாகனத்தை டெலிவரி, வணிகரீதியான பயன்பாட்டுக்கு பயன்படுத்த அரசு அனுமதி வழங்கவில்லை என அவர் கூறியுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் அரசுஅனுமதியின்றி பைக் டாக்ஸி போக்குவரத்து சேவை நடைபெறுவது தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button