Site icon ழகரம்

குஜராத், கர்நாடக மாநில பாடத் திட்டத்தில் பகவத் கீதை

குஜராத் சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கல்வித்துறை அமைச்சர் ஜிட்டு வஹானி கூறியதாவது: பகவத் கீதையின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்கின்றனர். பகவத் கீதையைஅறிந்து கொள்ளவும், மாணவர்களிடையே அதுகுறித்த ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் 6 முதல் 12- ம் வகுப்பு வரை பாடத் திட்டங்களில் பகவத் கீதைஅறிமுகப்படுத்தப்படும்.

பின்னர், கதைகள், சுலோகங்கள், பாடல்கள், கட்டுரைகள், விவாதங்கள், நாடகங்கள் போன்றவடிவங்களில் பகவத் கீதைஅறிமுகப்படுத்தப்படும்.

9 முதல் 12-ம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு விரிவான முறையில் பகவத் கீதை அத்தியாயங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்றுள்ளன.

கர்நாடகாவிலும்..

கர்நாடகா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் நேற்று கூறுகையில், ‘‘வரும் கல்வி ஆண்டு முதல் கர்நாடகா வில் பள்ளிகளில் பகவத் கீதை, மகாபாரதம், ராமாயணம் ஆகி யவை கற்பிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. 3 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பில் பகவத் கீதை கற்பிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

Exit mobile version