பீகார் மாநிலம் பாகல்பூரில் ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
மகேந்திர மண்டல் என்பவர், தனது வீட்டின் அருகே பட்டாசு தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் இந்த பட்டாசு ஆலை சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
படுகாயம் அடைந்த 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.