Site icon ழகரம்

டாஸ்மாக் கடைகளை தேர்தல் நாட்களில் மூட உத்தரவு….!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதி மற்றும் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில், மதுக்கூடம் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால், வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க, உரிய ஆணைகள் வெளியிட அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

Exit mobile version