செய்திகள்அரசியல்இந்தியா

கிறிஸ்தவம், இஸ்லாமில் தீண்டாமை இல்லை…எனவே தலித் SC அந்தஸ்து தேவை இல்லை! மத்திய அரசு

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்து சமுதாயத்தில் இருந்த அடக்குமுறைச் சூழல்...

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்து சமுதாயத்தில் இருந்த அடக்குமுறைச் சூழல், கிருஸ்துவ அல்லது இஸ்லாமிய சமுதாயத்திலும் இருந்தது என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை! மத்திய அரசு

கிறிஸ்தவம் , இஸ்லாமில் தீண்டாமை இல்லை...எனவேஎனவே SC அந்தஸ்து அவசியம் இல்லை! -மத்திய அரசு

  • கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் தீண்டாமை இல்லை என்று மதம் மாறிய தலித்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து கோரிய வழக்கில் மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் எஸ்கே கவுல், அபய் எஸ் ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கிறிஸ்தவம் , இஸ்லாமில் தீண்டாமை இல்லை...எனவேஎனவே SC அந்தஸ்து அவசியம் இல்லை! -மத்திய அரசு

  • வழக்கு தொடர்பாக  மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்து சமுதாயத்தில் இருந்த அடக்குமுறைச் சூழல், கிருஸ்துவ அல்லது இஸ்லாமிய சமுதாயத்திலும் இருந்தது என்பதற்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை. இதனால் அவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து வழங்குவது அவசியம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
  • எனவே, 1950 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, இந்து, பௌத்த அல்லது சீக்கிய மதத்தைச் சேர்ந்த சமூகங்களுக்கு மட்டுமே அட்டவணை சாதி அந்தஸ்தை வழங்குகிறது, இது அரசியலமைப்பிற்கு எதிரானது அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவம் , இஸ்லாமில் தீண்டாமை இல்லை...எனவேஎனவே SC அந்தஸ்து அவசியம் இல்லை! -மத்திய அரசு

  • கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் 27 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) இடஒதுக்கீட்டிற்கு மட்டும் தகுதியுடையவர்கள் அல்ல என்றும், ஒபிசிக்களுக்கான மெட்ரிக் கல்வி உதவித்தொகை, விடுதிகள் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதியத்தால் மேற்கொள்ளப்படும் பிற வருமானம் ஈட்டும் செயல்பாடுகள் போன்ற மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பலன்கள் பெறுவதற்கும் தகுதியுடையவர்கள் என்றும்  மத்திய அரசு  தனது பதில் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.

User Rating: 4.7 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button