குடியரசுத் தினவிழாவின்போது நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பில் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறும் வகையில் வேத ரிஷிகளின் உருவம் இடம்பெற்ற கல்வி அமைச்சகத்தின் ஊர்திக்கு சிறந்த அலங்கார ஊர்திக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்திக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் கர்நாடக அலங்கார ஊர்திக்கும் மூன்றாவது இடம் மேகாலய அலங்கார ஊர்திக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக, MyGov இயங்குதளத்தின் மூலம், சிறந்த அணிவகுப்புக் குழுக்கள் மற்றும் பிரபலமான தேர்வுப் பிரிவில் சிறந்த அலங்கார ஊர்திகளுக்கு வாக்களிக்க பொதுமக்கள் அழைக்கப்பட்டனர். இந்த ஆன்லைன் வாக்கெடுப்பு ஜனவரி 25 முதல் 31 வரை நடத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.