Site icon ழகரம்

சஞ்சய் ராவத் மனைவி உள்ளிட்டோரின் ரூ.11 கோடி சொத்துகள் முடக்கம்

சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் உள்ளிட்ட 3 பேரின் ரூ.11.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இருந்து குரு ஆசிஷ் என்ற கட்டுமான நிறுவன உரிமையாளர் பிரவீன் ராவத் முறைகேடாக ரூ.100 கோடி கடன் பெற்றதாகவும் அந்தப் பணத்தை தன் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சஞ்சய் ராவத்தின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை போட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த மோசடிக்கு சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன் ராவத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பிரவீன் ராவத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத், பிரவீன் ராவத் மற்றும் சுஜித் பட்கர் என்பவரின் மனைவி ஸ்வப்னா பட்கர் ஆகியோருக்கு சொந்தமான ரூ.11. 15 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. சட்ட விரோத பண பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version