திருச்சி மாநகராட்சி நகர மேம்பாட்டு குழும துணை இயக்குநர் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சி நகர மேம்பாட்டுக் குழும மண்டல துணை இயக்குநராக இருப்பவர் தன்ராஜ். இவரது சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூர். இவருக்கு அரியலூரில் வீடு, திருமண மண்டபம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிலையில், ஸ்கேனிங் சென்டர் உள்ளது.
இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரியலூரில் உள்ள அவரது வீடு, அவருக்கு சொந்தமான மண்டபம், ஸ்கேனிங் சென்டரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீஸார் இன்று (ஜூலை 26) திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் பிலிமிசை கூத்தூரில் உள்ள அவரது வீட்டிலும் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.