முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளரும், தமிழக அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநருமான ஆர்.நாகசாமி (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
கல்வெட்டு, கலை, இசை, நாட்டியம், தமிழ் வரலாறு உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பல நூல்களையும் மறைந்த ஆர்.நாகசாமி எழுதியுள்ளார்.
புனே பல்கலைக்கழகத்தில் இந்தியக் கலைகள் மற்றும் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.
மறைந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமியின் பணிகளைப் பாராட்டி அவரை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது.