நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ஏப்ரல் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தின் அரபிக் குத்துப் பாடல் வீடியோ வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத்துடன் இந்தப் பாடலை பின்னணி பாடகி ஜொனிதா காந்தி இணைந்து பாடியுள்ளார்.
சுமார் 4.42 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள அரபிக் குத்துப் பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெளியிடப்பட்ட 40 நிமிடங்களிலேயே மில்லியன் பார்வையைக் கடந்தது அரபிக் குத்து பாடல் வீடியோ. இன்று மதியத்திற்குள்ளேயே 2கோடி பார்வைகளை கடந்துள்ளது.